Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நுழைந்த Omicron BF 7 அறிகுறிகள்… எச்சரிக்கையா இருங்க…..!!!

வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 சதவீதம் மக்களையும் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது வேகமாக பரவும் என்பதால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோய்,இதயம் மற்றும் கிட்னி பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதில் பரவும் என கூறப்படுகிறது. மேலும் காய்ச்சல், உடல் சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி,இருமல் மற்றும் வாசனை உணராமல் போன்ற அறிகுறிகளோடு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படக்கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |