சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள ரகுசாக் என்ற கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலியில் பலூன் ஒன்று சிக்கி இருந்தது. மேலும் அதனுடன் சிறிய காகித பாகிஸ்தான் கொடி ஒன்றும் இணைத்து கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த பலூன் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வீசப்பட்ட நிலையில் முள்கம்பி வேலியில் சிக்கி உடைந்திருக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல் தாள் ஒன்றும் அந்த பாகிஸ்தான் கொடியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த தாளில் செல்போன் நம்பர்கள் சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பாகிஸ்தான் கொடியை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்திய பகுதிக்குள் தங்கள் நாட்டு கொடியை அனுப்புவதை வழக்கமாக வைத்து வருகிறது. இருப்பினும் ஜனவரி 26 குடியரசு தினம் நடைபெற இருக்கின்ற இந்த நிலையில் பாகிஸ்தான் கொடி எல்லையில் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.