Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த பிரிட்டனை சேர்ந்தவர் ..!! வீட்டில் இருந்தபடியே விண்கலத்தை செயலாற்றுகிறார்… எப்படி தெரியுமா..?

நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான பெர்ஸெவேரன்ஸை  லண்டனில் வீட்டிலிருந்தபடியே ஒருவர் கட்டுபடுத்தி கொண்டிருக்கிறார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 55 வயதான பேராசிரியர் சஞ்சீவ் குப்தா என்பவர் தனது வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் பெர்ஸெவேரன்ஸை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடு பார்ப்பதற்கு மேல் தளத்தில் இருக்கும் ஒற்றைப் படுக்கை கொண்ட ஒரு சிறிய குடியிருப்பாக உள்ளது. இவர் உலகில் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய நிலவியல் நிபுணர் ஆவார்.

பேராசிரியர் குப்தா 1965ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்து தனது 5 வயதில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து உள்ளார். இவர் புவி அறிவியல் நிபுணராக பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கலிபோர்னியாவின் ஆய்வகத்தில் இருக்க வேண்டியவர். ஆனால் கொரோனா தொற்று காரணத்தால் பயணம் தடை செய்யப்பட்டதால் தனது வீட்டில்  இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். தனது வீட்டிலிருந்து வேலை பார்த்தால்  மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று இந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளார் .

பேராசிரியர் குப்தா செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ள விண்கலம் எந்தெந்த இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் குழுவில் வேலை செய்து வருகிறார். அந்த குழு அப்படி சேகரிக்கப்பட்ட மண்ணை ஆராய்ச்சி செய்து அந்த செவ்வாய் கிரகத்தில் மக்கள் உயிர் வாமுடியுமா ?என்பது பற்றி ஆராயும் குழுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |