Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை”… ரூ.500 கோடி முதலீடு…!!!!!!!!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை பிரச்சனை காரணமாக நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். எலக்ட்ரிக் வாகனங்களை அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதே போல இந்த நிறுவனங்களும் அதிகமான அளவில் உற்பத்தி ஆலையை அமைத்து அதிகமாக முதலீடு செய்து வருகின்றன.

அந்த வகையில் ஒகினாவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைகின்றது. கரோலி எனும் இடத்தில் இதற்காக 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு அமைக்கப்படும் ஆலையில் வருடத்திற்கு 10 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 2023 அக்டோபர் மாதம் முதல் இந்த ஆலை செயல்பட தொடங்கும். ஒகினாவா நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்கனவே இரண்டு ஆலைகள்  இருக்கிறது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் பகுதியில் இந்த ஆலை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது தொடங்கப்படும் புதிய ஆலையில் 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆலை பற்றி ஒகினாவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜிதேந்தர் ஷர்மா பேசும்போது, இருசக்கர எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலை வகிக்கும் நாங்கள் இந்திய துறையில் உள்ள நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும் புதிதாக அமைக்கப்படும் ஆலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இருக்கும் இதன் மூலமாக சந்தையில் உள்ள தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |