Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசியின்…. விலை எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிராக 91.6% பலன் அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்திய மதிப்பில் ரூபாய் 800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |