ஒமிக்ரான் வைரஸின் திரிபு வடிவான பிஎஃப் 7 வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 சதவீதம் மக்களையும் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும். அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.