இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் அதானோம் கெட்ரேயஸ் கூறியது, கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% அதிகரித்து உள்ளது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் பிஏ 4 மற்றும் பிஏ 5 அலைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தையதை விட மிக வித்தியாசமாக தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படும். நாம் இன்னும் தொற்றுக்கும் மத்தியில் இருக்கிறோம். வைரஸுக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே அது பிஏ4, பிஏ5 அல்லது பிஏ2.75 ஆக இருந்தாலும் வைரஸ் தொடரும். அதனால் மக்கள் முக கவசம் அடைந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். மேலும் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.