தடுப்பூசி போட்டுக் கொண்ட தனிநபர்கள் பூஸ்டர் தடுப்பூசி பின்பற்றப்பட வேண்டுமா? என்பதை ஆய்வுகள் மட்டுமே கூறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக 2 டேஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு தான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் மூத்த அதிகாரியும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவருமான டாக்டர் எம் கே அரோரா செய்தி நிறுவனம் ஒன்றில் கூறியதாவது: தடுப்பூசியை அனைவருமே முழுமையாக செலுத்த வேண்டும்.
மக்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். அப்படி போடப்பட்ட பிறகுதான் பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்க முடியும் என்று கூறினார். தடுப்பூசி பெற்ற பின்னர் தனிநபருக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது. தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள தனிநபர் இடையே பூஸ்டர் தடுப்பூசி பின்பற்ற வேண்டுமா? என்பதை ஆய்வுகள் மட்டுமே கூறும் என அவர் தெரிவித்துள்ளார்.