அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் இந்தியாவில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தாலும் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களின் நலனை கொண்டே முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.