அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக அசுஸ் தெரிவித்துள்ளது.
இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத்கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் உள்ளதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என பெரும்பாலான மோட்களில் பயன்படுத்த முடியும்.