இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இன்று அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிப்லா நிறுவனம் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்தியாவில் பொருளாதார தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது.