இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் B.1.617.2 அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கவலையை அளிக்கிறது என இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நாட்டில் இந்த புதிய கொரோனா பரவலை அறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்
மேலும் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சிவப்பு பட்டியலில் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வரும் நபர்கள் நாட்டில் நுழைய அனுமதி இல்லை என்றும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.