Categories
உலக செய்திகள்

இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…. HSBC வங்கி தகவல்….!!!

HSBC வங்கி ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

HSBC வாங்கி ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயரம் என்று கணித்துள்ளது. அதாவது 10 லட்சம் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்புகளை வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மில்லியனர்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 60 லட்சமாகவும், மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதமாகவும் உயரும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய பசிபிக் நாடுகளில் ஆஸ்திரேலியா மில்லியனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது. இதனையடுத்து வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மில்லியனர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், ஹாங்காங் மூன்றாவது இடத்திலும், தைவான் நான்காவது இடத்தில் வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |