கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 2 வது அலை வரும். அது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ளது. சுனாமி போல் ஆபத்தை அது உருவாக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்தே இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.