மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளுக்கு இது பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தடுப்பூசிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தது.
ஆனால் தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிர படுத்த வேண்டும். மக்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து உரிய ஆய்வுகளுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் அவர்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.