தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி.
அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டை வேறு பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பப்ஜி உள்ளிட்ட பல கேம்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது. இதனையடுத்து பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்னும் பெயரில் இந்த கேம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.