Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. வெளியான தகவல்… பிரதமர் மோடி அதிரடி முடிவு…?

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா  வைரஸ் அதன் பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்  இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான்  தொற்று காரணமாக சீனாவில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மற்ற நாடுகளும் அச்சத்தில் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் குறைந்த பாதிப்புற்ற தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தொற்று பரவல்  வேகத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா  வைரஸ் நான்காவது ஜூன் மாதம் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்து கூறியுள்ளனர்.

Categories

Tech |