Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. முன்பதிவு இன்று துவக்கம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி.

அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் சீன செயலிகளில் பப்ஜி விளையாட்டு இடம் பெற்றிருந்ததால் இந்திய அரசு அதனை தடை செய்தது.இந்நிலையில் இந்தியாவுக்கு என பிரத்தியேகமாக “Battleground mobile india” என்ற பெயரில் புதிய மொபைல் கேமை தென் கொரிய நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. மக்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.

Categories

Tech |