இந்தியாவிலேயே முதன்முதலாக குஜராத்தில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது.
இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகளில் இருந்து வருடத்திற்கு 1.9 கோடி டன் கழிவுகள் வெளியேறி வீணாக கீழே கொட்டப்படுவதால் அதைப் பயன்படுத்தி சாலை போட ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் தொழிற்பேட்டையில் இந்த கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சாலையானது ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகின்றது. எப்போதும் போல் பிற பொருட்களை பயன்படுத்தாமல் 100% இயற்கை கழிவுகளை கொண்டு இந்த சாலை போடப்படுகிறது. இது போன்ற பல முன்னோடி திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து நெடுஞ்சாலை உருவாக்கும் பணிகளில் கழிவுகளை பயன்படுத்தி எதிர்காலத்தில் வலிமையான சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசானது யூகித்திருக்கின்றது.