Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் முதல்முறையாக…. “பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்” முறையில் வெளியாகும் பீஸ்ட் டிரைலர்…. 6 மணிக்கு ரெடியா இருங்க…!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லர்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகிறது.

இந்தியாவில் முதல் முறையாக திரைப்படத்தின் டிரைலர் பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.  பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்பது முழுமையான திரை மற்றும் நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்புடன் ஐமேக்ஸ் போன்ற அனுபவத்தை தரும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர் .

Categories

Tech |