இந்தியாவில் முதன்முறையாக அண்ணாநகர் சைக்கிள்ஸ் சார்பில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் பந்தயம் நடைபெற உள்ளது. இன்று & நாளை நடைபெற உள்ள இந்த பந்தயத்தில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ராணிப்பேட்டை ரேன் சையர்ஸ், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
பந்தய தூரமான 48 கிலோமீட்டர் தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் வெற்றி புள்ளிகள் வழங்கப்படும்.மொத்தம் ஐந்து பிரிவுகளில் நடைபெறும் இதில் முதல் பரிசாக மூன்று லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 18 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் என 5 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.