இந்தியாவில் முதன்முறையாக ஆண்ட்ராய்டு 11 டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதற்கு முன்பு பல வகையான டிவிகள் உள்ளன. பல நிறுவனங்களின் டிவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோனி, சாம்சங், போன்ற நிறுவனங்களும் புதிய வகையான டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சீன எலக்ட்ரிக் நிறுவனமான டிசிஎல் இந்தியாவில் முதல் முறையாக ஆண்ட்ராய்டு 11 தொழில்நுட்ப அடிப்படையில் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பி 725 மாடலில் வெளிவந்துள்ள இந்த டிவியில் வெளிப்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் டிவியில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் மேலும் இந்த டிவியின் விலை 41,990 முதல் தொடங்கியுள்ளது.