Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக…. ‘டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த எருமை கன்று’… மருத்துவர்கள் சாதனை…!!!

இந்தியாவில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் டெஸ்ட் முறையில் பன்னி எருமை கன்று பெற்று எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் குச் பகுதியில் பன்னி வகை எருமை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த எருமை ஒரு நாளுக்கு 12 முதல் 18 லிட்டர் வரை பால் கறக்கிறது. இந்த இனம் மற்ற எருமை இனங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. இது நீண்ட பாலூட்டும் காலங்களை அனுமதிக்கின்றது. அதிக பால் உற்பத்தி  மற்றும் நோய் எதிர்க்கும் திறன் கொண்டது.

இத்தகைய எருமையை செயற்கை முறையில் உருவாக்க குஜராத் மருத்துவர்கள் திட்டமிட்டன. இதற்காக சோம்நாத் மாவட்டம், தனெஜ் பகுதியைச் சேர்ந்த விவசாயி வினெய் எல்.வாலா  என்பவரின் பண்ணையிலிருந்து மூன்று பன்னி எருமைகளின் கருமுட்டைகளை அவர்கள் சேகரித்தனர். இதை டெஸ்ட் டியூப் முறையில் மற்றொரு எருமைக்கு செலுத்தினர். தற்போது அந்த எருமை மாடு செயற்கை கருவூட்டல் முறையில் முதல் பன்னி எருமையை இன்று ஈன்றுள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் OPU – IVF பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |