இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தலைமை மருத்துவர் அந்தோணி பௌசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் சில வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமென அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி பௌசி தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடியாக தேவைக்காக பெற்று அதனை வினியோகிக்க வேண்டும். அரசாங்கத்தின் அனைத்து துறைகளையும், மத்திய அரசு அணிதிரட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.