உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் வருவதற்கு முன்பாகவே தடுப்பு முறையாக தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாம் டோஸ் என தவணை முறையில் போடப்பட்டு வருகின்றன.
அதாவது ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனிகா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவெக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்தி வருகின்றது.
இந்தநிலையில் உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் அனுமதி பெற்று பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார்.