பென்ஷன் அமைப்பை பாதுகாப்பதற்கு போதிய ரிட்டயர்மென்ட் பலன்களை வழங்குவதற்காக இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என EPFO தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 2047 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.அதில் மற்ற நாடுகளில் அனுபவங்களையும் பென்ஷன் அமைப்பை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அதே நேரம் அதிக அளவிலானோர் முதுமை அடைந்து வருகிறார்கள்.
2047 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14 கோடி பேர் 60 வயதை தாண்டி இருப்பார்கள். அதனால் பென்ஷன் அமைப்பில் நிலை நிறுத்த செய்வதற்கு இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும். ரிட்டயர்மென்ட் வயது வரம்பை உயர்த்துவதால், EPFOநிறுவனத்திலும் இதர பென்ஷன் நிதிகளிலும் நீண்ட காலத்துக்கு டெபாசிட்டுகள் அதிகரிக்கும். இதனால் நாட்டில் பண வீக்கத்தை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.