Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரெட்மி பேட் அறிமுகம்….. அசத்தல் டீசர் வெளியீடு….!!!

Xiaomi நிறுவனம் Redmi பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய Redmi பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என Xiaomi தெரிவித்துள்ளது. இதற்கான டீசரில் Redmi பேட் மாடல் கிரீன், கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Redmi பேட் மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 10.6 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி,  90Hz ரிப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,10-பிட் கலர் டெப்த், 8MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, முன்புற கேமரா ஃபோக்கஸ்ஃபிரேம் தொழில்நுட்பத்துடன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பேட்டரியை பொருத்தவரை Redmi பேட் மாடல் 8000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் எனவும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இனி வரும்  நாட்களில் இந்த டேப்லெட் பற்றிய கூடுதல் விவரங்களை Xiaomi டீசர்கள் வடிவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |