சீனாவில் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு ராஜஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோன வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதேபோன்று சீனாவில் இருந்து திரும்பி வந்த இளம்பெண் ஒருவருக்கும் அறிகுறிகள் காணப்பட்டடு மருத்துவக்கல்லூரியில் தனி வார்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு இந்தியாவுக்கு சீனாவிலிருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து 700 க்கும் அதிகமான பயணிகளை சோதித்ததில் யாருக்கும் நோய் அறிகுறிகள் காணப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
எனினும் கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் .நேபாளத்தில் ஒருவருக்கொருவர் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதை ஒட்டிய மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. நிலைமையை உன்னிப்பாக கவனிக்க படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. புத்தாண்டு விடுமுறை அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிப்பு என்று சீன அரசு இன்று அறிவித்துள்ளது .தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வைரஸ் தாக்குதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது .