ஆப்கான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பாய்ந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உலக நாடுகள் அங்குள்ள மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பீஹார் மாநிலம் பிஸ்ஃபி சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க., – எம்.எல்.ஏ., ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஆப்கானிஸ்தான் போரினால் இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.
அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போல வேறு எங்கும் பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வாழ பயப்படுபவர்கள் ஆப்கானுக்கு செல்லலாம். அங்கு பெட்ரோல் டீசல் விலை மிகவும் குறைவு. அங்கு சென்ற பிறகுதான் இந்தியாவினுடைய அருமை தெரிய வரும். காடுகளுக்கு கூட சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஆப்கானுக்கு எந்த சட்டதிட்டங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.