கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்காக ஆயுஷ் மருந்துகள் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவர்களை உள்ளடக்கியது ஆயுஸ் என்று அழைக்கப்படுகின்றது. குஜராத்தின் ஆயுஸ் முதலீடு மற்றும் புத்தக மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஆயுஸ் துறையில் முதலீடு மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை. கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது பெரிதும் உதவியாக இருந்தது.
பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டவருக்கு சிறப்பு ஆயுஷ் விசா வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தியாவில் பாரம்பரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுஷ் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் ஆயுஷ் குறியீடு பதிவிடும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.