Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவில் வேகத்தில் பந்து போட ஆள் இல்லை….. “இங்கிலாந்தில் பிரதமரே இல்லை”….. கேலி செய்த முன்னாள் வீரர்..!!

“இங்கிலாந்தில் பிரதமர் இல்லை” என்று இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார்..

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள்சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையடுத்து நாளை (22ஆம் தேதி) முதல் பிரதான சூப்பர் 12 சுற்றுப்போட்டி தொடங்குகிறது.. 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு  நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அதன்பின் மாலை 4:30 மணிக்கு இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.. தொடர்ந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே டி20 உலகக் கோப்பை அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2022 அணிகளின் பலவீனங்கள் எனக்கூறி  இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில் பதிவு செய்தார்.

அதில், “இந்தியாவிடம் 150 கிமீ + வேகப்பந்து வீச்சாளர் இல்லை. பாகிஸ்தானிடம் அனுபவமுள்ள ஃபினிஷர் இல்லை. நியூசிலாந்து ஆஸ்திரேலியாவில் சிறந்த சாதனை இல்லை. இலங்கை அனுபவம் வாய்ந்த அணி இல்லை.” இங்கிலாந்தில் பிரதமர் இல்லை என்றார்.. தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இங்கிலாந்தை ட்ரோல் செய்த அவர், “இங்கிலாந்தில் பிரதமர் இல்லை” என்று கேலி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |