இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டின் 2ஆம் காலாண்டில் 25% அதிகரித்துள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் முடங்கி பொருளாதார தேக்க நிலையை நாடு சந்தித்தது. இந்நிலையில் சென்ற சில மாதங்களாக தொழில் துறை வளர்ச்சி, பொருளாதார முன்னேற்ற நிலை காணப்படுகிறது.
நாட்டில் உற்பத்திதுறையின் பொருளாதார வளர்ச்சியானது, சென்ற அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஆரோக்கியமுடன் காணப்பட்டது என்று புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது, இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதியானது, கடந்த வருடத்தின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டின் (2022-23) 2ஆம் காலாண்டில் 25% அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி இந்த நிதி ஆண்டில் பெருமளவில் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில், இதற்கு முந்தின ஆண்டில் இதே மாதங்களில் இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.