Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 லட்சம் பேர் மீண்டனர் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழு உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக நோய் தொற்று கொண்ட நாடாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 52,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,83,792ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 775 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளதால் மொத்த இறப்பு 34,968ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதித்த 10,20,582பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 5,28,242பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |