Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட நகரம் எது தெரியுமா?…. நீங்களே பாருங்க…..!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட நகரம் என்ற பெருமையை ஒடிசாவின் புவனேஸ்வர் பெற்றுள்ளது. புவனேஷ்வர் நகராட்சியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 10.6 லட்சம் பேருக்கு 1 டோசும், 8 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் களும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் உள்ள இந்த நகரத்தை சேர்ந்த சிலருக்கும் மட்டுமே தடுப்பூசி போடவில்லை. இங்குள்ள வேறு ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |