Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்கு…. பரிசோதனை தொடக்கம்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சீனா அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மெடிடிரினா மருத்துவமனையில் 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோணா தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது.

Categories

Tech |