இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. மத்திய அரசு தொடர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிட பட்டதில், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358ஆகவும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 432ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும, நிலையில் 24 மணிநேரத்தில் 757 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4.20 லட்சம் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை, இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 4 ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.