இந்தியாவில் இதுவரை 162 மருத்துவர்கள் மற்றும் 107 செவிலியர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கொரோனா பாதிப்பால் இதுவரை முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 162 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி வரை 107 செவிலியர்களும், 44 ஆஷா திட்ட தன்னார்வலர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.