நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெய் பீம் . இந்தப் படம் இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஜெய்பீம். இந்த படம் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனைகளை படைத்து வந்துள்ளது.
அதில் குறிப்பாக உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் முதலிடத்தை பிடித்தது, கோல்டன் குளோப் விருதிற்கு அனுப்பப்பட்டது என சில முக்கிய சாதனைகளை செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடிய திரைப்படங்களில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 6வது இடத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.