Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி…. விரைவில் பரிசோதனை….!!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோர்பேவக்ஸ் என்ற பூஸ்டர் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தடுப்பூசி ஒன்றே கொரோனா எதிரான சிறந்த ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் கோவிசில்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி என்று மூன்றாவது தவணையாக ஒரு தடுப்பூசியைப் போட தொடங்கியுள்ளனர். பிற நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.

இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில்,ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் என்ற மருந்து நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு எதிராக கோர்பெவேக்ஸ் என்ற ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. மேலும் அந்நிறுவனம் இந்த தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருக்கிறது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் எனவும் அதன் பின்னர் மூன்றாவது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |