Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.17 கோடியாக உயர்ந்த கொரோனா பரிசோதனை…!!!

இந்தியாவின் கொரோனாவை கண்டறிவதற்கு நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று வரையில் 3,17,42,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 8,01,518 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.67 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 20,37,871 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குடமடைந்தோர் விகிதம் 73.6 சதவீதமாகவும் இருக்கின்றது. கொரோனாவிற்கு எதிராக விரைவு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |