Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 பகுதிகளில் சுப்ரீம் கோர்ட் …. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கோரிக்கை….!!!!

குடும்ப வழக்குகள் சின்ன சின்ன குற்ற வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.

நாட்டின் 4 பகுதிகளில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வழக்குகள், சின்னசின்ன குற்ற வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறைக்கப்பட வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பரிந்துரைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |