Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி வீண்… இதில் தமிழகம் தான் முதலிடம்..!!

இந்தியாவில் இதுவரை 44 லட்சம் டோஸ்  கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. தடுப்பூசி வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தை வகிக்கின்றது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி விண்ணாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாகவும், ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும் கேரளா, மேற்கு வங்கம், மற்றும் இமாச்சல பிரதேசம் கோவா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தடுப்பூசிகள் எதுவும் வீணாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் தடுப்பூசிகளை வீணடித்தது தமிழகம் முதலிடத்தை வகிக்கின்றது.

Categories

Tech |