இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும் டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதை விட குறைவாகவே இருக்கும் எனவும் ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை சேவை தொடங்கி விடும். அடையாளம் இல்லா அழைப்புகள் சிக்கலைத் தீர்க்க ஒரு ஒழுங்குமுறை உள்ளதால் பெயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் நாள் தொடங்க உள்ளது” என கூறினார்.