Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை…. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022” நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ, vi நிறுவனங்கள் கலந்து கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனங்கள் முதல் கட்டமாக இந்த 5g இணைய சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி சேவை துவங்கும் என்று தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் 5G வசதி கொண்ட சிம் அனைத்தையும் வரும் தீபாவளி முதல் விற்பனை செய்ய உள்ளது.

இதனையடுத்து முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் சேவை வழங்கப்படும். இந்த நகரங்களை தவிர மற்ற 9 நகரங்களுக்கு தீபாவளி முதல் 5G சேவை வழங்கப்படும். இந்த நகரங்கள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், காந்திநகர், குறுகிராமம், ஹைதராபாத், ஜாம் நகர், லக்னோ புனே ஆகியாகவை ஆகும். ஜியோ மற்றும் ஏர்டெல் அதன் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் வோடபோன், ஐடியா நிறுவனம் தங்கியுள்ளது. மேலும் இந்த 5ஜி டேட்டா விலையை பொறுத்தவரை 4ஜி ப்ளான் விலையிலேயே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான 5G சேவையை வழங்கியவுடன் இந்த டேட்டா விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |