நாட்டில் தினம் தோறும் புதுவிதமான பிரச்சனைகளால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்சனை, பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை, காதல் விவகாரம், கணவன் மனைவி சண்டை, விவசாயிகள் தற்கொலை, ஆன்லைன் ரம்மியால் தற்கொலை என தினம் தோறும் தற்கொலை நடந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் 2.50 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 77,659 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.