இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பணி செய்வோர் எண்ணிக்கை 44.2 கோடியாக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு இது 42.4 கோடியாக குறைந்தது. பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு 43.5 கோடி பேர் மட்டுமே இந்தியாவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.