Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 54% பேர்…. முதல் டோஸ் போட்டுருக்காங்க… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 54 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

குறிப்பாக சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் மட்டும் 18.38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |