டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன.
இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் ஆப் திங்ஸ், மெஷின் டு மெஷின் கம்யூனிகேஷன், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு ஆகியவை மேம்படும்.முழு நீள உயர்தர வீடியோ அல்லது திரைப்படத்தை கைபேசி சாதனத்தில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
உங்கள் போனில் 5g ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது குறித்து இதில் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் போன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இருக்க வேண்டும். செல்போனில் செட்டிங்ஸில் வைஃபை அல்லது நெட்வொர்க் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உள்ள சிம் அண்ட் நெட்வொர்க் ஆப்ஷனை கிளிக் செய்தால் 2G, 3G, 4G, 5G என காட்டப்படும். அதில் 5ஜி ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். 4ஜியை விட 5g 100 மடங்கு அதிவேகம் கொண்டதால் எதையும் பதிவிறக்கம் செய்வது எளிது.