இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5-வது நாளாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 5ஆம் தேதி முதல் முறையாக 1,03,000 தாண்டிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றது.அதன்பிறகு கடந்த 7ஆம் தேதி கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,15,000ஐ கடந்தது.
நேற்று முன்தினம் 1,26,000க்கும் அதிகமானோருக்கும், நேற்று 1,31,000க்கு அதிகமானோருக்கும் புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 1,45,000க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.