இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை நெருங்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இந்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84,877 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதனால் தற்போது வரை 51,01,398 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அது மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் 9,47,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11,42,811 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது வரை மொத்தமாக 7,31,10,041 கொரோனோ மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.